ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ கணக்கீட்டு சூத்திரத்தில் மாற்றம், 0% ஆகும் அகவிலைப்படி

7th Pay Commission, DA Hike Calculation: மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு ஏற்பட்டவுடன் அதன் பிறகான அகவிலைப்படி கணக்கீடு புதிய முறையில் செய்யப்படும். அடுத்த அகவிலைப்படிக்கான கணக்கிடுதல் பிப்ரவரி 29 அதாவது இன்று முதல் தொடங்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 29, 2024, 03:52 PM IST
  • தற்போதைய அகவிலைப்படி எவ்வளவு?
  • பூஜ்ஜியம் ஆகும் அகவிலைப்படி.
  • அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?
ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ கணக்கீட்டு சூத்திரத்தில் மாற்றம், 0% ஆகும் அகவிலைப்படி

7th Pay Commission, DA Hike Calculation: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. மார்ச் மாதம் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும். எனினும் இந்த முறை அகவிலைப்படி அதிகரிப்பு சிறப்பம்சம் வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியுடன் சம்பள கணக்கீட்டிற்கான சூத்திரத்தில் மாற்றம் ஏற்படும். இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Add Zee News as a Preferred Source

மார்ச் மாதத்தில் அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வு ஏற்பட்டவுடன் அதன் பிறகான அகவிலைப்படி கணக்கீடு புதிய முறையில் செய்யப்படும். அடுத்த அகவிலைப்படிக்கான கணக்கிடுதல் பிப்ரவரி 29 அதாவது இன்று முதல் தொடங்கும். ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி கணக்கீடு புதிய முறையில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான காரணம் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை சார்ந்தூள்ளது. 

பூஜ்ஜியம் ஆகும் அகவிலைப்படி

ஏழாவது ஊதிய குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன் அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படியின் தொகை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். இதன் பிறகு அகவிலைப்படி கணக்கீடு 0%, 1%, 2% என்ற முறையில் நடைபெறும். 

தற்போதைய அகவிலைப்படி எவ்வளவு

மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) தற்போது 46 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்பதை தெளிவாகியுள்ளது. எனினும் இது இன்னும் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படவிலை. ஏப்ரல் மாத சம்பளத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது ஜனவரி 1 2024 முதல் அமலுக்கு வரும். ஆகையால் ஜனவரி முதலான அகவிலைப்படி அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | மார்ச் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? உடனே படிக்கவும்

அகவிலைப்படி கணக்கீடு (DA Hike Calculation)

இதற்கிடையில் அடுத்த டிஏ ஹைக்குக்கான (DA Hike) ஏற்பாடுகள் துவங்கி விட்டன. ஜனவரிக்குப் பிறகு ஜூலை 2024 இல் அடுத்த அகவிலைப்படி திருத்தம் இருக்கும். இந்த திருத்தத்தின் போது அகவிலைப்படி கணக்கீட்டில் சில மாறுதல்கள் இருக்கும். அகவிலைப்படி இப்போது 50 சதவீதத்தை எட்டி விடும் என்பதால் இதன் கணக்கீடு (DA Formula) 0% இலிருந்து தொடங்கும்.

அடிப்படை ஆண்டின் புதிய தொடர்

2016 ஆம் ஆண்டில் 7வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அப்போது தொழிலாளர் அமைச்சகம் (Labor Ministry) அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கான சூத்திரத்தையும் மாற்றியது. அப்போது அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டு மாற்றப்பட்டு ஊதிய விகிதக் குறியீட்டின் (WRI-Wage Rate Index) புதிய தொடர் வெளியிடப்பட்டது. 

அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?

அரசு ஊழியர்களுக்கான சூத்திரம்:

அகவிலைப்படி= {(அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100) கடந்த 12 மாதங்களுக்கு-115.76)/115.76} x 100.

மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கான சூத்திரம்:

அகவிலைப்படி= {(அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100) கடந்த 3 மாதங்களுக்கு-126.33)/126.33} x 100.

மேலும் படிக்க | பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பைபேக் பாலிசி! சந்தையைவிட 25% அதிக லாபம் சம்பாதிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News