நேபாளத்தில் செஃப் ஆக அஜித்... ரசிகரின் வீடியோ வைரல் - அப்போ AK62 என்னாச்சு?

Ajith Kumar Video Viral: நேபாளத்தின் ஒரு உணவகத்தில் அஜித் சமைக்கும் வீடியோவும், ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 26, 2023, 06:50 PM IST
  • இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் எப்போது எடுக்கப்பட்டது என உறுதியாகவில்லை.
  • அவர் சமீபத்தில் நாடு முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
நேபாளத்தில் செஃப் ஆக அஜித்... ரசிகரின் வீடியோ வைரல் - அப்போ AK62 என்னாச்சு? title=

Ajith Video Viral: நடிகர் அஜித்குமார், பைக் ஓட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். கடந்த சில மாதங்களாக அவரது பைக்கில், அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்த அவர், சமீபத்தில் தனது பைக்கிங் பயணத்தை மீண்டும் தொடங்கியதாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது அவர் நேபாளத்தில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக, நேபாளத்தில் அஜித் இருக்கும், பல காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

ட்விட்டரில் அஜித் ரசிகர் ஒருவர் பகிர்ந்த வீடியோவில், அஜித் நேபாளில் உள்ள ஒரு உணவகத்தின் சமையலறையில் காணப்பட்டார். அவர் உணவு சமைக்கம்போது அணியும் ஏப்ரான் மற்றும் ஒரு சமையல்காரரின் தொப்பியையும் அணிந்திருந்தார். அஜித் அந்த உணவகத்தில் உணவை தயாரித்ததாக கூறப்படுகிறது. அவர் உணவகத்தின் சில ஊழியர்களால் சூழப்பட்டதை வீடியோவில் காணலாம்.

மேலும் படிக்க | நான் வாய் திறந்தா சமந்தா மானம் போய்டும்.. விளாசும் தயாரிப்பாளர்! என்ன நடந்தது?

இந்த வீடியோவை தவிர்த்து, வெளியான ஒரு புகைப்படத்தில், அவர் உணவகத்தின் ஊழியர்களுடன் படம் எடுத்துக்கொண்டார். அதில், அஜித் வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தார். ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பகிர்ந்த ட்வீட்டில், அஜித் சாப்பிடும் மற்றொரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில், சாம்பல் மற்றும் நீல நிற ஆடைகளை அணிந்து, அவர் ஒரு மேஜையில் அமர்ந்து தனது உணவை சாப்பிட்டார்.

இதையடுத்து, பல்வேறு ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். அப்போது, அஜித்துடன் வீடியோ எடுத்த ஒருவர், அஜித்தை சவுத் இந்தியன் சூப்பர் ஸ்டார் என்ற குறிப்பிட்ட வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

கார்கில், லே, லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், மணாலி, ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய இடங்கள் வழியாக நடிகர் அஜித் தனது பைக்கில் பயணித்து வருகிறார். பைக்கிங் பயணத்தை முடித்துக் கொண்ட அஜித், கடைசியாக வெளியான துணிவு படத்தின் படப்பிடிப்பை முடிக்க பாங்காக் சென்றார். அஜித் - ஷாலினி ஜோடி தங்களது 23ஆவது திருமண நாளை நேற்று கொண்டாடினர். அதில், ஷாலினி அவரது சமூக வலைதளப்பக்கத்தில், தான் அஜித்திற்கு கேக் ஊட்டும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அது இணையத்தில் வைரலானது. 

துணிவு, திரையரங்குகளில் உலகளவில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தில் மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், அஜித் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு அவரது ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக கூறப்படும் நிலையில், அப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | குக் வித் கோமாளி 4: அடுத்த வார கலக்கல் எபிசோட், வெளியான மாஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News