குக் வித் கோமாளி 4: அடுத்த வார கலக்கல் எபிசோட், வெளியான மாஸ் அப்டேட்

கடந்த வாரம் எபிசோட்டில் இருந்து ஷெரின் வெளியேறிவிட்டார், இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது அடுத்த வாரம் ஸ்பெஷல் எபிசோடு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 26, 2023, 11:28 AM IST
  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டுவிஸ்.
  • அடுத்த வார கலாட்டா எபிசோட்.
குக் வித் கோமாளி 4: அடுத்த வார கலக்கல் எபிசோட், வெளியான மாஸ் அப்டேட் title=

குக் வித் கோமாளி சீசன் 4: குக் வித் கோமாளி தொடர்தான் தற்போது இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொதுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது நான்காவது சீசன் வரை கொண்டு வந்திருப்பதன் மூலம், தொடரின் வெற்றியையும், வீச்சையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அந்த தொடரில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோரின் கூர்மையான தீர்ப்புகள் முதல் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை அனைத்து அம்சங்களும் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. சனி, ஞாயிறு தினங்களில் வரும் அந்த ஒருமணிநேர எபிசோட்களை பார்க்க தொலைக்காட்சியிலும், மொபைலிலும் அனைவரும் மூழ்கிவிடுவார்கள். 

அப்படி  ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி என புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக்கு ஆக களமிறங்கி கலக்கி வருகிறார். இதனிடையே இந்த ஷோவில் இருந்து தற்போது வரை கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, விஜே விஷால், ஷெரின் ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர்.

மேலும் படிக்க | விரைவில் முடிவுக்கும் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்..அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த நிலையில் தற்போது தற்போது இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக aஎன்னவென்றால் இந்த வாரத்திற்கான எபிசோடு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வீடியோவை பார்க்கும் போது இந்த வாரம் கிராமத்து சமையல் எபிசோடு வரப்போகிறது போல் தெரிகிறது, இதனால் கிராமத்தில் இந்த வார ஷீட் எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க | விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லோகேஷ் கனகராஜ்! எந்த படம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News