Drishyam: ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகும் முதல் இந்திய படம் ‘த்ரிஷ்யம்’!

Mohanlal Drishyam Hollywood Remake : மோகன்லால் நடிப்பில் 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம், தற்போது ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆக உள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 1, 2024, 01:13 PM IST
  • மோகன்லால் நடித்த படம், த்ரிஷயம்
  • இது ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகவுள்ளது
  • ஆங்கிலத்தில் உருவாகும் முதல் இந்திய படம்
Drishyam: ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகும் முதல் இந்திய படம் ‘த்ரிஷ்யம்’!  title=

Mohanlal Drishyam Hollywood Remake : மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 11 வருடங்களுக்கு முன்பு மலையாள மொழியில் வெளியான படம், த்ரிஷ்யம். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். இப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகவுள்ளதாம். 

த்ரிஷ்யம் திரைப்படம்:

ஒரு கொலையை மறைக்க குடும்பமே சேர்ந்து தீட்டும் திட்டம். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா? இந்த ஒருவரிக்கதையை வைத்து எடுக்கப்பட்ட படம், த்ரிஷ்யம். இதில் நடிகர் மோகன்லால் குடும்ப தலைவராகவும் அவருக்கு ஜோடியாக மீனாவும் நடித்திருப்பர். இந்த திரைப்படம் வெளியான போது கேரளா மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த வரவேற்பினை பெற்றது. 

நல்ல த்ரில்லர்-கமர்ஷியல் கதைகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்கெட் உள்ளது. அதே போலத்தான், த்ரிஷ்யம் படத்தையும் ரசிகர்கள் வரவேற்றனர். இதையடுத்து, தமிழிலும் ‘பாபநாசம்’ என்ற பெயரில் இப்படம் ரீ-மேக் ஆனது. இதில், கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க அவருடன் சேர்ந்து கெளதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 

ஹாலிவுட் ரீ-மேக்:

த்ரிஷ்யம் படம், இந்திய மொழிகளில் ரீ-மேக் ஆனதை தாண்டி, தற்போது வெளிநாட்டு மொழிகளிலும் உருவாக்கப்பட உள்ளது. தயாரிப்பாளர் அபிஷேக் பதாக், த்ரிஷ்யம் படம், கொரிய மொழியில் ரீ-மேக் ஆக உள்ளதாக 2023ஆம் ஆண்டு நடைப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, Gulfstream Pictures மற்றும் JOAT Films நிறுவனங்களுடன் கைக்கோர்த்து, த்ரிஷ்யம் படத்தை ஆங்கில மொழியிலும் ரீ-மேக் செய்ய உள்ளன. 

மேலும் படிக்க | ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உண்மை கதை என்ன? குணா குகையில் அப்படி என்னதான் நடந்தது?

ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகும் முதல் இந்திய படம்…

இதுவரை, பல்வேறு ஹாலிவுட் படங்கள் இந்திய மொழியில் ரீ-மேக் செய்யப்பட்டு, அதன் பிறகு பிற மொழிகளில் தயாரிக்கப்படுவதை பார்த்திருப்போம். ஆனால், முதன்முறையாக இந்திய மொழி திரைப்படம் ஒன்று, ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகவுள்ளது. அதுவும், அது தென்னிந்திய மொழி படம் என்பதால் தமிழ்-மலையாள ரசிகர்கள் பெருமிதத்தோடு இந்த அறிவிப்பினை ஷேர் செய்து வருகின்றனர். 
இந்தியிலும் வரவேற்பை பெற்ற த்ரிஷ்யம்..

த்ரிஷ்யம் படம், மலையாளத்தில் வெளியானவுடன் இந்தி மற்றம் தமிழ் மொழியில் ரீ-மேக் ஆனது. இந்தியில் அதே பெயரில் உருவான படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். 2021 ஆம் ஆண்டு, த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படமும் கேரளாவில் பெரிய ஹிட் ஆக அமைந்தது. இதைத்தொடர்ந்து, இதனை இந்தியிலும் அஜய் தேவ்கனை வைத்து ரீ-மேக் செய்தனர். இதற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து. இன்னும் இந்த படத்தில் எத்தனை பாகங்கள் எடுத்தாலும் அதனை இந்தியில் ரீ-மேக் செய்வர். 

தமிழிலும் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமல் ஹாசன்-கெளதமி தனிப்பட்ட வாழ்க்கையில் பிரிந்து விட்டதால், இனி படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதனால், இப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் ரீ-மேக் அகவில்லை. 

மேலும் படிக்க | Guess Who? முகத்தை பாஸ்போர்ட்டால் மறைத்த நாயகி! யாரென்று தெரிகிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News