மீண்டும் சிஎஸ்கே-வில் சுரேஷ் ரெய்னா? சந்தித்துக்கொண்ட தோனி, ரெய்னா!

CSK Reunion: இந்தியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ODIயின் போது 'தல' MS தோனி 'சின்ன தல' சுரேஷ் ரெய்னாவை சந்தித்து பேசினார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 16, 2022, 12:22 PM IST
  • சந்தித்து கொண்ட ரெய்னா மற்றும் தோனி.
  • இந்தியா - இங்கிலாந்து போட்டியை காண மைதானத்திற்கு வருகை.
  • புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
மீண்டும் சிஎஸ்கே-வில் சுரேஷ் ரெய்னா? சந்தித்துக்கொண்ட தோனி, ரெய்னா! title=

IND vs ENG: எம்எஸ் தோனி கடந்த சில நாட்களாக லண்டனில் இருந்து வருகிறார்.  தனது 41வது பிறந்தநாளை ஜூலை 7 அன்று லண்டனில் கொண்டாடினார், அதில் அனைத்து டீம் இந்தியா உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் தோனி லண்டனில் உலா வரும் புகைப்படங்களும் இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கின.  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.  டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.  ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோசமாக தோல்வியை சந்தித்தது.  2வது ஒருநாள் போட்டியை காண முன்னாள் கேப்டன்கள் மற்றும் பிற இந்திய ஜாம்பவான்கள் மைதானத்திற்கு வந்து இருந்தனர்.  

 

மேலும் படிக்க | 2022 ஆசியக் கோப்பை நடைபெறுமா? இலங்கை முக்கிய அறிவிப்பு!

சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வரும் மைதானத்தில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். கேமராக்கள் அவர்களைக் கண்டுபிடித்து திரையில் கொண்டு வந்தவுடன், இந்திய ரசிகர்கள் அமைதியாக இருக்க முடியாமல் ஒன்றாக கர்ஜித்தனர். அது போல சுரேஷ் ரெய்னாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட சில புகைப்படங்கள் வைரல் ஆனது.  மைதானத்தில் இருந்து தோனி, ஹர்பஜன் சிங், ரெய்னா ஆகியோர் போட்டியை ரசித்த புகைப்படங்கள் தான் அவை.  தோனி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 3வது டி20 போட்டியிலும் கலந்து கொண்டார், அங்கு அவர் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விளையாட்டைப் பற்றி விவாதித்த புகைப்படங்களும் வெளியானது.  

 

தோனியை ரெய்னா சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரெய்னாவை வாங்க சிஎஸ்கே மறுத்த பிறகு, தோனி மற்றும் ரெய்னா இடையே ஏற்பட்ட மோதலால் இது நடந்ததாக வதந்திகள் பரவின. ஆனால் இந்தப் படங்கள் அப்படிப்பட்ட வதந்திகளையெல்லாம் நிராகரித்துள்ளன. ரெய்னாவும் தோனியும் சிஎஸ்கே அணிக்கு வெளியேயும் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் படங்கள் சான்றாகும்.

மேலும் படிக்க | உம்ரான் மாலிக் எதற்கு? இந்திய அணியின் முன்னாள் வீரர் சரமாரி கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News