இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா, இலங்கையில் நடந்து வரும் அரசியல் குழப்பங்கள் மற்றும் அமைதியின்மைக்கு மத்தியிலும், ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கோப்பையை நடத்தும் நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலகக் கோரி கடந்த ஒரு வாரமாக இலங்கையில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்துள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷ மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரது சொகுசு இல்லம் பொது மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | IND vs ENG: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக விளையாடும் மூவேந்தர்ஸ்! யார் அவர்கள்?
எவ்வாறாயினும், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை சமீபத்தில் ஆஸ்திரேலியா சீரிஸை வெற்றிகரமாக நடத்தியது. டி20 மற்றும் ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு சுற்றுப்பயணத்திற்காக ஆஸ்திரேலிய அணி கடந்த ஜூன் மாதம் இலங்கை வந்து விளையாடி சென்றது. ஆசிய கோப்பையை நடத்துவது குறித்து இலங்கை நம்பிக்கையுடன் இருப்பதற்கு மற்றொரு காரணம், பாகிஸ்தான் அணி சமீபத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வந்தது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே ஒரு வார்ம்-அப் போட்டியில் விளையாடியுள்ளனர், மேலும் பார்வையாளர்கள் வெளியில் உள்ள அரசியல் கலவரங்களால் பாதிக்கப்படவில்லை என்பதை PCB உறுதிப்படுத்தியுள்ளது.
ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைக்கான இடமாக இலங்கையைத் தக்கவைக்க வேண்டுமா என்பது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இறுதி முடிவு எடுக்கவுள்ளது. "எங்களைப் பொறுத்த வரையில், நாங்கள் இன்னும் இலங்கையில் போட்டியை நடத்துவதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாங்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நடத்தியுள்ளோம், பாகிஸ்தானும் தற்போது எங்கள் நாட்டில் தான் உள்ளது," டி சில்வா கூறியுள்ளார். ஆசியக் கோப்பையின் 2022 பதிப்பு டி20 போட்டியாகத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை போட்டிகள் நடைபெற உள்ளது. ஹாங்காங், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தகுதிச் சுற்றில் போட்டியிட உள்ளன, இதில் முதல் அணி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உடன் மோத உள்ளது.
மேலும் படிக்க | IND vs ENG 2nd ODI: விராட் கோலி குறித்து சவுரவ் கங்குலி அதிரடி கருத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ