இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதத்திலேயெ வைத்துள்ளது.
பணவியல் கொள்கைக் குழு (MPC) விகிதங்களை சீராக வைத்திருப்பதற்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்தது.
6 MPC உறுப்பினர்களில் 5 பேர் இணக்க நிலைப்பாட்டை திரும்பப் பெறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்
நகர்ப்புற தேவை வலுவாக உள்ளது, கிராமப்புற தேவை மறுமலர்ச்சி தொடர்கிறது என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
கேபெக்ஸ் சுழற்சியில் முடுக்கம் ஏற்படுவதற்கு நல்ல சூழல் இருப்பதாக கவர்னர் கூறினார்
FY24க்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.5% இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
FY24க்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) கணிப்பு 5.2%லிருந்து 5.1% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது
ஆர்பிஐ Q1FY24 CPI விகிதங்களை 5.1% இலிருந்து 4.6% ஆக குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, பணவீக்கம் இன்னும் 4% என்னும் இலக்கை விட அதிகமாக உள்ளது
ரூபே ப்ரீ-பெய்டு ஃபாரெக்ஸ் கார்டுகளை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது