ஜேபிஎம் சட்டம், 1987ன் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான சணல் பேக்கேஜிங் மெட்டீரியலுக்கான முன்பதிவு விதிமுறைகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆலைகள் மற்றும் துணைப் பிரிவுகளில் பணிபுரியும் 4 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவு இது. சுமார் 40 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு ஆதரவையும் வழங்கும்.
ஜூலை 1 முதல் ஜூன் 30 வரையிலான ஆண்டுக்கு பேக்கேஜிங் தொடர்பான முடிவு இது. சணல் பைகளில் மட்டுமே 100 சதவீத உணவு தானியங்களை பொட்டலமிட வேண்டும். அதேபோல, சர்க்கரை பேக்கிங்கில் 20 சதவீதம் சணல் பைகளில் இருக்க வேண்டும்
இந்த திட்டம் இந்தியாவில் உள்ள சணல் மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தித் துறையின் நலன்களைப் பாதுகாக்கும் என்று மத்திய அரசின் அறிவிக்கை தெரிவித்துள்ளது.
12,000 கோடி மதிப்பிலான சணல் சாக்குகளை அரசு வாங்குகிறது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சணலில் சுமார் 65 சதவீதம் சணல் பேக்கேஜிங் பொருட்களுக்காக பயன்படுத்தப்படுகிறது
சணல் பைகளில் பேக்கேஜிங் செய்வது சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த முடிவு உதவும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசியப் பொருளாதாரத்தில் குறிப்பாக மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சணல் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
சணல் தொழிலின் மொத்த உற்பத்தியில் சணல் பைகள் 75 சதவிகிதம் ஆகும், இதில் 85 சதவிகிதம் இந்திய உணவுக் கழகம் (FCI) மற்றும் மாநில கொள்முதல் முகவர் (SPAs) ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது, மீதமுள்ளவை நேரடியாக ஏற்றுமதி/விற்பனை செய்யப்படுகின்றன.