அலட்சியப்படுத்தாதீங்க.. இதுவே வைட்டமின் பி12 குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள்

Published by: Vijaya Lakshmi | Dec 10, 2023

நரம்புகளில் பிரச்சனை

வைட்டமின் பி12 குறைபாடு ஆரம்ப கால அறிகுறிகள் பொதுவாக இலேசானதாக இருந்தாலும் வைட்டமின் பி12 கடுமையான குறைபாடு நரம்பு மண்டலத்துக்கு நிரந்தர சேதத்தை உண்டு செய்யும்.

Published by: Vijaya Lakshmi | Dec 10, 2023

கடுமையான சோர்வு

வைட்டமின் பி12 உடலில் செல்கள் செயல்பாட்டுக்கு அவசியம். இதன் குறைபாடு சாதாரண இரத்த சிவப்பணு உற்பத்தியை குறைக்கலாம். இது ஆக்ஸிஜன் செல்வதை பாதிக்கலாம். இதனால் நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணரலாம்.

Published by: Vijaya Lakshmi | Dec 10, 2023

மஞ்சள் நிற தோல்

வைட்டமின் பி12 மஞ்சள் நிற தோல் உருவாக்கும். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை என்பது போன்று வைட்டமின் பி12 குறைபாட்டுடன் தொடர்புடைய இரத்த சோகை உடலில் முழுமையடையாத சிவப்பு இரத்த அணுக்கள் ஆரோக்கியமான நிலையில் இல்லாததால் உண்டாகலாம்.

Published by: Vijaya Lakshmi | Dec 10, 2023

கை கால்களில் உணர்வின்மை

கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை அல்லது எரியும் அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வை இவை அளிக்கலாம்.

Published by: Vijaya Lakshmi | Dec 10, 2023

வலி மற்றும் வீக்கம்

வைட்டமின் பி 12 குறைபாடு இருக்கும் போது நாக்கில் வலி மற்றும் வீக்கம் காரணமாக இருக்கும். இது பி12 குறைபாட்டால் உண்டாகலாம்.

Published by: Vijaya Lakshmi | Dec 10, 2023

செரிமானக்கோளாறு

வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது அது செரிமான பாதையை பாதிக்கும். இது வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல், வீக்கம், வாயு, பசியின்மை மற்றும் எடை இழப்பு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை உண்டு செய்யும்.

Published by: Vijaya Lakshmi | Dec 10, 2023

​மனநல குறைபாடு

​வைட்டமின் பி12 குறைபாடு நரம்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கும். இதனால் மனதில் ஒருவித மூடுபனி இருக்கும். பொதுவாக வயதானவர்கள் இந்த பக்கவிளைவுகளை அதிகம் கொண்டிருப்பார்கள்.

Published by: Vijaya Lakshmi | Dec 10, 2023

VIEW ALL

Read Next Story