2020-21 & 2021-22 நிதியாண்டுகளில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு வழங்குவதற்காக 2.69 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது.
மத்திய அரசு வாங்கிய இந்தக் கடனை 2026 மார்ச்சுக்குள் முழுமையாக அடைக்க வேண்டும்
மத்திய அரசு வாங்கிய ஜிஎஸ்டி இழப்பீடு கடனை கடனை நான்கு மாதங்களுக்கு முன்னதாக திருப்பிச் செலுத்தலாம்
இந்தக் கடனை 2025 நவம்பர் மாதத்திற்குள் மத்திய அரசு திருப்பிச் செலுத்தலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பிறகு மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு செஸ் அறிமுகப்படுத்தப்பட்டது
வரி வருவாயானது கோவிட்-19 இன் போது மத்திய அரசு கடனாகப் பெற்ற ரூ.2.69 லட்சம் கோடியின் வட்டி மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படுகிறது
ஜிஎஸ்டி கவுன்சிலின்அண்மைக் கூட்டத்தில், இழப்பீடு செஸ் விதிப்பு, கடன் தொகையை திருப்பிச் செலுத்துதல் தொடர்பான விவகாரத்தை கர்நாடகா எழுப்பியது குறிப்பிடத்தக்கது