பணத்துக்கு பாதுகாப்பும் உத்தரவாதமான வருமானமும் அளிக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் பலர் சந்தை அச்சங்கள் இன்றி நிம்மதியாக தங்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் மிக பிரபலமாக உள்ள தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டம் (Post Office Time Deposit Scheme) பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடந்த ஆண்டு போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தின் ஐந்து ஆண்டுகால திட்டத்திற்கான வட்டி விகிதம் (Interest Rate) 7% -இலிருந்து 7.5% ஆக அதிகரிக்கப்பட்டது.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் தற்போது, 1 ஆண்டு முதலீட்டுக்கு 6.9% வட்டி, 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு 7% வட்டி, 5 ஆண்டுகளுக்கு 7.5% வட்டி கிடைக்கின்றது.
ஒருவர் தான் முதலீடு செய்த தொகையை விட இரட்டிப்பு வருமானத்தை பெற வேண்டுமானால் 5 ஆண்டுகளை விட அதிக காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான கால அளவுகளில் முதலீடு செய்யலாம்.
வருமான வரி சட்டம் 1961 -இன் பிரிவு 80C இன் கீழ் தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் வரிவிலக்கு (Tax Exemption) கிடைக்கும்.
இதில், ஒற்றைக் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்கை திறக்கலாம். மேலும், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கணக்கைத் திறக்கலாம்.
ஒருவர் 5 ஆண்டுகளுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 7.5 சதவிகித வட்டி விகிதத்தில், வட்டி தொகையாக மட்டும் அவருக்கு 2,24,974 ரூபாய் கிடைக்கும்.