PF உறுப்பினர்கள் அலர்ட்!! EPFO செய்துள்ள முக்கிய விதி மாற்றங்கள் இதோ

Sripriya Sambathkumar
Jun 11,2024
';

EPFO

இபிஎஃப்ஓ (EPFO) அவ்வப்போது உறுப்பினர்களின் வசதி மற்றும் நன்மைக்காக பல வித மாற்றங்களை செய்கிறது.

';

பல இடங்களுக்கான க்ளெய்ம் தீர்வு

EPFO ​​செய்த சமீபத்திய மாற்றங்களில் தானியங்கு தீர்வு (Auto Settlement), பல இடங்களுக்கான க்ளெய்ம் தீர்வு (Multi Location Claim Settlement) மற்றும் இறப்புக்கான க்ளெய்ம்களின் விரைவான தீர்வு (Death Claim) ஆகியவை அடங்கும்.

';

ஆட்டோ-செட்டில்மென்ட் வசதி

EPFO, 68B விதியின் கீழ் வீட்டுவசதி மற்றும் 68K விதியின் கீழ் கல்வி மற்றும் திருமணத்திற்கான ஆட்டோ-செட்டில்மென்ட் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், இனி 1,00,000 ரூபாய் வரையிலான கோரிக்கைகள் மனித தலையீடு இல்லாமல் தானாகவே செயல்படுத்தப்படும்.

';

அலுவலக அமைப்பு

EPF க்ளைம்களை விரைவாக செட்டில் செய்ய, EPFO ​​பல இடங்களில் தீர்வுக்கான இணைப்பு அலுவலக அமைப்பைத் தொடங்கியுள்ளது. இதனால் இனி க்ளெய்ம்கள் மிக விரைவாக செட்டில் செய்யப்படும்.

';

ஆதார் தகவல்

ஆதார் தகவல் இல்லாத வழக்குகளில், இறப்பு க்ளெய்ம் செயலாக்கத்தை எளிதாக்க, இப்போது EPFO ஆதார் சீடிங் இல்லாமல் பிசிக்கல் க்ளெய்ம்களை அனுமதித்துள்ளது. எனினும், இதற்கு OIC-யிடம் இருந்து முறையான ஒப்புதல் தேவை. இதில் சில நிபந்தனைகள் உள்ளன.

';

ஆன்லைன் க்ளெய்ம்

ஆன்லைன் க்ளெய்ம்களை விரைவாகத் தீர்க்க, EPFO ​​காசோலை பக்கத்தின் படம் அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கை பதிவேற்றுவதற்கான கட்டாய விதியை தளர்த்தியுள்ளது.

';

EPFO

இபிஎஃப் உறுப்பினர்களின் வசதிக்காக EPFO அவ்வப்போது விதிகளில் பல மாற்றங்களை செய்கிறது. இவற்றைப் பற்றிய புரிதல் இருபது மிக அவசியமாகும்.

';

VIEW ALL

Read Next Story