இபிஎஃப்ஓ (EPFO) அவ்வப்போது உறுப்பினர்களின் வசதி மற்றும் நன்மைக்காக பல வித மாற்றங்களை செய்கிறது.
EPFO செய்த சமீபத்திய மாற்றங்களில் தானியங்கு தீர்வு (Auto Settlement), பல இடங்களுக்கான க்ளெய்ம் தீர்வு (Multi Location Claim Settlement) மற்றும் இறப்புக்கான க்ளெய்ம்களின் விரைவான தீர்வு (Death Claim) ஆகியவை அடங்கும்.
EPFO, 68B விதியின் கீழ் வீட்டுவசதி மற்றும் 68K விதியின் கீழ் கல்வி மற்றும் திருமணத்திற்கான ஆட்டோ-செட்டில்மென்ட் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், இனி 1,00,000 ரூபாய் வரையிலான கோரிக்கைகள் மனித தலையீடு இல்லாமல் தானாகவே செயல்படுத்தப்படும்.
EPF க்ளைம்களை விரைவாக செட்டில் செய்ய, EPFO பல இடங்களில் தீர்வுக்கான இணைப்பு அலுவலக அமைப்பைத் தொடங்கியுள்ளது. இதனால் இனி க்ளெய்ம்கள் மிக விரைவாக செட்டில் செய்யப்படும்.
ஆதார் தகவல் இல்லாத வழக்குகளில், இறப்பு க்ளெய்ம் செயலாக்கத்தை எளிதாக்க, இப்போது EPFO ஆதார் சீடிங் இல்லாமல் பிசிக்கல் க்ளெய்ம்களை அனுமதித்துள்ளது. எனினும், இதற்கு OIC-யிடம் இருந்து முறையான ஒப்புதல் தேவை. இதில் சில நிபந்தனைகள் உள்ளன.
ஆன்லைன் க்ளெய்ம்களை விரைவாகத் தீர்க்க, EPFO காசோலை பக்கத்தின் படம் அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கை பதிவேற்றுவதற்கான கட்டாய விதியை தளர்த்தியுள்ளது.
இபிஎஃப் உறுப்பினர்களின் வசதிக்காக EPFO அவ்வப்போது விதிகளில் பல மாற்றங்களை செய்கிறது. இவற்றைப் பற்றிய புரிதல் இருபது மிக அவசியமாகும்.