பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி அரசாங்க சேமிப்பு திட்டமாகும். இதில் பாதுகாப்பான வருமானத்திற்கான உத்தரவாதம் கிடைக்கின்றது.
பிபிஎஃப் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். தற்போது இத்திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
பிபிஎஃப் திட்டத்தின் மூலம் நீங்கள் ரூ.27 லட்சம் என்ற பெரிய நிதியை உருவாக்கலாம். இதற்கான முழுமையான கணக்கீட்டை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ரூ.27 லட்சம் தொகையை உருவாக்க, முதலீட்டாளர் 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு 7.1% விகிதத்தில் வட்டி கிடைக்கும்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது PPF கணக்கின் முதிர்வு காலத்தில், நீங்கள் மொத்தம் ரூ.15 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள்.
இந்த முதலீட்டில் மொத்த வட்டியாக ரூ.12,12,139 பெறுவீர்கள்.
பணத்தை திரும்பப் பெறும்போது, முதலீட்டுத் தொகை (ரூ.15 லட்சம்) மற்றும் வட்டித் தொகை (ரூ.12,12,139) இரண்டையும் சேர்த்து எடுக்கலாம்.
அதாவது, திட்டமிட்டு பிபிஎஃப் -இல் முதலீடு செய்வதன் மூலம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த முதிர்வுத் தொகையாக ரூ. 27,12,139 -ஐப் பெறலாம்.