உங்கள் டிக்கெட்டில் உங்கள் குடும்ப உறுப்பினர் பயணம் செய்யலாம்...!

';

இந்திய ரயில்வே

தினம் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் இந்திய ரயில்வே, உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் என அழைக்கப்படுகிறது.

';

முன்பதிவு

ரயிலில் பயணிக்க, முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். எனினும் சில சமயங்களில், ஏதோ ஒரு காரணத்தால் பயணிக்க முடியாமல் போகலாம்.

';

டிக்கெட்

பயணிக்க முடியாத சமயத்தில், உங்கள் டிக்கெட்டை, உங்களுக்கு பதிலாக உங்கள் குடும்பத்தினர், பயணம் செய்ய அவரது பெயருக்கு மாற்றும் வசதி உண்டு.

';


கன்ஃபார்ம் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்ற, கவுண்டருக்கு சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

';

அடையாள அட்டை

விண்ணப்பத்துடன் உங்களது அடையாள அட்டை மற்றும் நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் உங்கள் குடும்பத்தினரின் அடையாள அட்டை இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.

';

குடும்ப உறுப்பினர்

உங்கள் ரயில்வே டிக்கெட்டை, நண்பருக்கு அல்லது வேறு நபருக்கு மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்ற மட்டுமே அனுமதி உண்டு.

';

24 மணி நேரம்

நீங்கள் பயணம் செய்யும் ரயில், புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரம் முன்னதாகவே, டிக்கெட்டை வேறு பெயருக்கு மாற்ற விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story