சாலையோர கடை அல்லது வாடகை கடை: எது பெஸ்ட்?

';


புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த கேள்வி நிச்சயம் எழும்.

';


சாலையோர கடை போடலாமா? அல்லது வாடகை கடையில் கடை தொடங்கலாமா? என்ற குழப்பம் இருக்கும்.

';


இந்த குழப்பத்துக்கு பதில் என்னவென்றால், சிம்பிளாக சொல்லிவிடலாம் உங்கள் குடும்ப சூழலை பொறுத்தது.

';


யார் பிஸ்னஸ் தொடங்க நினைத்தாலும் குடும்ப நிதிநிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப பிஸ்னஸ் முதலீட்டை முடிவு செய்ய வேண்டும்.

';


தொழிலில் அனுபவம் இருந்தாலும் புதிதாக தொழில் தொடங்கும்போது எதிர்பார்க்கும் வருவாய் இருக்காது.

';


அதனால், கையில் கொஞ்சம் பணம் கட்டாயம் இருக்க வேண்டும். தொழிலை கடன் வாங்கி ஆரம்பித்தால் அதன் சாதக பாதகங்கள் குறித்து இன்னும் அதிகம் ஆராய வேண்டும்.

';


ஒருவர் கடன் வாங்குகிறார் என்றாலே நிதிநிலைமை மோசமாக இருக்கிறது என்றே அர்த்தம். அப்படியே வாங்கினாலும் அந்த தொகையை முழுவதுமாக பிஸ்னஸூக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

';


பிஸ்னஸில் கிடைக்கும் வருவாயை கடன் கட்டுவதற்கு மட்டுமே நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள் என்றால் தாரளமாக கடன் வாங்கி பிஸ்னஸ் தொடங்கலாம்.

';


அதேபோல் அனுபவம் இருந்தால் வாடகைக்கு கடை எடுக்கலாம். இல்லையென்றால் சாலையோர கடையை குறைவான முதலீட்டில் ஆரம்பித்து அதில் கிடைக்கும் அனுபவத்தில் இருந்து வாடகை கடைக்கு செல்லலாம்.

';


ஆனால், மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் முதலீடு தொகை, தொழில் அனுபவம் இரண்டும் அவசியம். அதில் ஒழுக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே தொழிலில் முன்னேற முடியும்.

';


குடும்ப சுமைகளுக்காக பிஸ்னஸில் வரும் வருவாயை சரியாக மேலாண்மை செய்யவில்லை என்றால் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவீர்கள்.

';

VIEW ALL

Read Next Story