ஐடிஆர் தாக்கல் செய்துவிட்டீர்களா? வருமான வரி ரீஃபண்ட் தொகை இன்னும் வரவில்லையா? அதற்கு இவை காரணங்களாக இருக்கலாம்.
வரி போர்ட்டலில் வழங்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் தவறானதாகவோ அல்லது செயலற்றதாகவோ இருந்தால், பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையில் முடக்கம் அல்லது தாமதம் ஏற்படலாம்.
TDS விலக்குகளில் செய்யப்பட்டுள்ள க்ளெய்ம்கள் படிவம் 26AS அல்லது வருடாந்திர தகவல் அறிக்கை அதாவது AIS -இல் வழங்கப்பட்ட விவரங்களுடன் பொருந்தவில்லை என்றால் ஐடிஆர் ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்யும் போது வரி செலுத்துவோர் (Taxpayers) தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களில் தவறுகள் செய்திருந்து, அவை கண்டறியப்பட்டால் ரீஃபண்ட் பெற தாமதம் ஆகலாம்.
வருமான வரித் துறையின் (Income Tax Department), AI அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட மறுஆய்வு முறையின் காரணமாக ஐடிஆர் -இல் சிறிய தவறுகள் இருந்தாலும் கூட அது தாமதத்திற்கு வழிவகுக்கலாம்.
வருமான வரி போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் சரியானவையா என்பதையும் செயலில் உள்ளனவா என்பதையும் வரி செலுத்துவோர் தவறாமல் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
ஐடிஆர் ரீஃபண்ட் தாமதமாகாமல் இருக்க, ஐடிஆர் தாக்கல் செய்யும்போது வரி செலுத்துவோர் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை நன்றாக க்ராஸ் செக் செய்து உள்ளிட வேண்டும்.
வருமான வரி ரிட்டன் ரீஃபண்டைச் செயல்படுத்த, வருமான வரி கணக்கின் மின் சரிபார்ப்பு அதாவது ஈ-வெரிஃபிகேஷன் அவசியமாகும்.