பொதுவாக, எல்லோருக்குமே பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வதோடு, சிறந்த வருமானத்தையும் பெற வேண்டும் என்ற நோக்கமே இருக்கும்.
நீண்ட கால பரஸ்பர நிதிய முதலீடுகளுக்கு கிடைத்த வருமானம் 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே வந்துள்ளது. சராசரியாக, வருவாய் விகிதம் 12 முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது.
மாதத்திற்கு ரூ. 10,000 என்ற அளவில் 21 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்யும் போது, மொத்தத் முதலீட்டு தொகை ரூ.25,20,000 ஆக இருக்கும்.
முதலீட்டில் கிடைக்கும் வருமானம் 16 சதவிகிதம் என எடுத்துக் கொண்டால், ரூ.1,81,19,345 வருமானத்துடன் 21 ஆண்டுகளில் கையில் ரூ.2,06,39,345 இருக்கும்.
பரஸ்பர நிதியத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும், மீண்டும் திட்டமிட்டு முதலீடு செய்வது பல கோடி ரூபாய் சேர்க்க உதவுகிறது.
பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.