தோல்வியும்,வெற்றியும் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் குழந்தைகளிடம் இருக்க வேண்டும்.
இடத்தை சுத்தமாக வைத்திருக்கவும், அவற்றைப் பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
குடும்பம், நண்பர்கள் மற்றும் தெரியாத உறவுகள் போன்றோரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.
பணத்தின் மதிப்புகுறித்து அடிப்படைத் தகவல் தெரிந்திருப்பது அவசியம்.
நேர மேலாண்மை மற்றும் பொறுப்பு இரண்டிலும் சரியாகச் செயல்படத் தெரிந்திருக்க வேண்டும்.
கருணை, அன்பு, மரியாதை மற்றும் தன்னடக்கம் இவை அனைத்தும் நிச்சயம் வளரும் குழந்தைகள் கற்றிருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் நன்மை மற்றும் தீமை பற்றிய பகுப்பாய்வைக் கற்றுக்கொடுப்பது மிக அவசியம்.
குழந்தைகளிடம் பெற்றோர்கள் உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.