உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி இரண்டும் தினமும் காலை மாலை மேற்கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
உணவு மற்றும் தூக்கம் இரண்டும் மிகவும் அவசியம் இரண்டையும் சரியான நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.
சக நண்பர்களிடம் நீங்கள் படித்ததை கற்றுக் கொடுக்க வேண்டும் அதன் மூலம் உங்களுக்கு அதிக அறிவுத்திறன், ஞாபகசக்தி வளரும்.
ஏற்கனவே நடைபெற்ற தேர்வுத் தாள்கள் முழுவதும் படித்து எழுதிப் பார்க்க வேண்டும்.
படிக்கும் நேரத்தில் ஏதேனும் சிறு தவறு ஏற்பட்டால் உடனே அதனை சரி செய்து அது என்ன என்பதைக் கண்டறிந்து அது குறித்துப் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.
குறிக்கோள் அட்டவணையை உருவாக்க வேண்டும் இது உங்கள் வாழ்க்கை முறையை ஒரு தெளிவான நேர்பாதைக்குக் கொண்டு செல்ல உதவுகிறது.