குளிர் காலத்தில் அதிகம் மாரடைப்பு வருவது ஏன்?
குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுவதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். மிதமான உடற்பயிற்சியான வாக்கிங் செல்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதய நோயாளிகள் பல விஷயங்களை கவனம் செலுத்தினாலும், குளிர்காலங்களில் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது.
ஆயிரக்கணக்கானோருக்கு குளிர்காலங்களில் மாரடைப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளிர்ந்த காலநிலைக்கும், மாரடைப்பு வருவதற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. கடும் குளிர் காலங்களில் வெப்பத்தை தக்க வைப்பதற்காக நம்முடைய ரத்த நாளங்கள் சுருங்குகின்றன.
உடலில் ஒரு நிலையான வெப்பநிலையை தக்க வைப்பதற்காக உடல் இப்படிதான் மெனக்கெடுக்கிறது. குளிர்ந்த காலநிலையில் உடலில் ஏற்படும் தாக்கத்தால் வெப்பநிலை குறைகிறது.
இந்த நேரத்தில் இரத்த நாளங்கள் சுருங்குவதால், உடலில் மற்ற பாகங்களுக்கு குறிப்பாக இதயத்திற்கு இரத்தம் பாய்வது கடினமாக மாறுகிறது. ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் குறைவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு போதிய உடற்செயல்பாடு இல்லாமல் போகும்போது அவை கட்டுக்குள் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த காரணங்களுக்கு மத்தியில் குளிர்காலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம், அழுத்த நிலைகள் போன்றவையும் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது.