செரிமானம் தொடர்பான பிரச்சனையில் ஒன்றான அசிடிட்டி, நெஞ்செரிச்சல் எனப்படும் அமிலத்தன்மை கடுமையான உடல் நலக்குறைவை ஏற்படுத்தலாம்.
பித்த தோஷத்தை சமநிலைப்படுத்தும் திறனைக் கொண்டுள்ள தனியா நீர் மூலம் ஆசிடிட்டிக்கு தீர்வு காணலாம்.
சாப்பிட்ட பின் சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை அருந்தினால், அசிடிட்டி இருந்து விடுபடலாம்.
புதினா இலைகள் உடலில் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, ஆசிடிட்டிடக்கு அருமருந்தாக செயல்படுகிறது
சாப்பிட்ட பின் சிறிதளவு பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு உட்கொள்வது ஆசிடிட்டி ஏற்படாமல் தடுக்கும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், ஆசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வை அளிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.