பூண்டில் உள்ள அலிசின் கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகின்றது.
மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நொய்கள் அண்டாமல் காக்கின்றது.
ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்த கிரீன் டீ கல்லீரலை பலப்படுத்தி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றது.
கீரை வகைகளில் உள்ள க்ளோரோஃபில் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமுன் சி கல்லீரலை துரிதப்படுத்தி நச்சுகளை நீக்குகின்றது.
ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ள ஆலிவ் எண்ணெய் கல்லீரலில் அழற்சி மற்றும் இறுக்கத்தை நீக்குகின்றன.
கல்லீரல் மற்றும் உடலின் நச்சுகளை நீக்கும் செயல்முறைக்கு தேவையான பெக்டின் மற்றும் பிற கூறுகள் இதில் உள்ளன.
கல்லீரல் மற்றும் பித்தப்பை செயல்முறையை ஊக்குவிக்கும் கூனைப்பு நச்சுகளை நீக்கவும் உதவுகிறது.
ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்த புளி, கல்லீரல் உட்பட உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது.
நெல்லிக்காயில் உள்ள கூறுகள் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றன. இதன் மூலம் உடலில் உள்ள ஹைப்பர்லிபிடெமியா மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்றவையும் குறைக்கப்படுகின்றன.