முழங்கால் வலி / மூட்டு வலி வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறு வயதிலேயே மக்களைத் துன்புறுத்தும் பிரச்னையாக மாறி வருகிறது.
பொதுவாக, முழங்கால் வலி உடலில் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது.
மூட்டு வலியில் நிவாரணம் அளிக்கும் சில இயற்கையான எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஞ்சளின் மருத்துவ குணங்கள் வலியைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். முழங்கால் வலியைப் போக்க, தினமும் ஒரு கிளாஸ் மஞ்சள் பால் குடிக்கவும்.
ப்ரோக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகள் / கீரை வகைகளை உட்கொள்வது முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் முழுவதையும் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதுடன் மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சியை உட்கொள்வது சுவாச பிரச்சனைகள், முழங்கால் வலி, பிடிப்புகள் மற்றும் வீக்கத்தை நிவர்த்தி செய்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற, உங்கள் உணவில் பால் பொருட்கள், பாதாம், சோயா ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.