தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதம் முதுகு தண்டுவடத்திற்கு நலம் சேர்க்கும். சியா விதைகள், பருப்பு வகைகள், பீன்ஸ், பாதாம் போன்றவை முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள மெலிந்த புரதம் தண்டுவட ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடியது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும்.
முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் பொருட்களை உட்கொள்வது அவசியமானது. எலும்புகள் கால்சியத்தால் ஆனது. பாலிலும் கால்சியம் இருப்பதால் அதனை உட்கொள்வது முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இவைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முதுகெலும்பு பகுதியை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவும்.
முட்டைக்கோஸ், புரோக்கோலி மற்றும் கீரை ஆகியவை முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டவை. இவற்றை தினசரி உணவில் சேர்த்
முதுகெலும்புக்கு வலு சேர்க்கும் பயனுள்ள மூலிகைகள் பல உள்ளன. மஞ்சள் போன்ற சில மசாலாப் பொருட்கள், சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய உதவுகின்றன.
இஞ்சி, துளசி, ரோஸ்மேரி, லவங்கப்பட்டை போன்ற மூலிகை பொருட்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை.