சமையலுக்கு சுவையும் மனமும் சேர்க்கும் கொத்துமல்லி ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளது.
கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட கொத்துமல்லி கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட கொத்துமல்லி சிறந்த டீடாக்ஸ் உணவு.
இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கரோட்டினாய்டுகள், கண் பார்வை கூர்மைக்கு உதவுகிறது.
முதுமை காரணமாக மாகுலர் சிதைவு ஏற்படுவதை தடுத்து இளமையை காக்கவும், வெண்படலத்தை குணப்படுத்தவும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கொத்தமல்லியை ஏதோ ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது பலன் தரும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.