வெங்காயத் தோலில் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தால் அதை நாம் குப்பைத் தொட்டியில் வீசமாட்டோம்.
வெங்காயத் தோலின் மகத்துவம் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்தலாம்?
வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இதன் தேநீர் கண்பார்வையை அதிகரிக்கச் செய்து மாலைக்கண் போன்ற நோய்களைத் தடுக்கும்.
வெங்காயத் தோலில் வைட்டமின் சி-யும் இருக்கிறது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசவும். இதனால் கூந்தல் உதிர்தல் பிரச்சனை நீங்கும்.
வெங்காயத் தோல் போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.
வெங்காயத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
வெங்காயத் தோலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், உடல் ஆற்றல் அதிகரிக்கும்.