கொத்தமல்லி தண்ணீரை காலையில் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை குடிப்பதால் உடல் வலிமை பெறும்.
தைராய்டு குறைபாடு அல்லது அதிகப்படியான தைராய்டு என இரண்டு பிரச்சனைகளிலும் தனியா நீர் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மல்லி நீரை தொடர்ந்து குடித்து வந்தால், யூரிக் அமில பிரச்சனையும் குறையும், நச்சுகள் வெளியேறும்.
மல்லி நீர் இரத்த சர்க்கரையை குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்கனவே குறைவாக உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் (Coriander Water) குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கொத்தமல்லி நீர் குடிப்பதால் செரிமானம் சீராகும், வளர்சிதை மாற்றமும் மேம்படும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை