தொப்பை கொழுப்பு, உடல் பருமன் ஆகியவற்றால் பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இதை சரி செய்ய மக்கள் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள்.
சில எளிய இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை வேகமாக இழக்கலாம். இவற்றால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
உடல் எடையை இழக்க உதவும் சில காய்கள் மற்றும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
முருங்கைக்காயில் ஆண்டிஆக்சிடெண்டுகள், நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. உடல் எடையை வேகமாகவும் ஆரோக்கியமான முறையிலும் இழக்க இது உதவும்.
சுரைக்காயில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இது எடை இழப்புக்கு ஏற்றதாக கருதப்படுகின்றது. தினமும் காலையில் சுரைக்காய் சாறு குடித்தால் வேகமாக எடையை இழக்கலாம்.
பலாப்பழம் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கிறது.
பொதுவாக கசப்பு சுவை எடை இழப்புக்கு ஏற்றதாக கருதப்படுகின்றது. கசப்பு சுவை கொண்ட பாகற்காய் உடல் எடையை குறைக்கவும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை அதிகம் உள்ள சீமை சுரைக்காய் உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவுகிறது. இது உடலின் நீரேற்றத்தையும் அதிகரிக்கின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.