யூரிக் அமில அளவு அதிகமானால் அது கீல்வாதம், மூட்டு வலி (Knee Pain) போன்ற பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது. யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில சாறுகளை பற்றி இங்கே காணலாம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் சிறிது எலுமிச்சை கலந்து குடித்து வந்தால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருப்பதோடு, மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைத்து வீக்கங்களும் குறையும்.
கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காயின் கலவையான திரிபலா தேநீர் செய்து குடித்தால், உடலில் உள்ள நச்சுகள் வேகமாக வெளியேறும். இது யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைப்பதுடன் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
மல்லி விதைகள், அதாவது தனியா நீர் யூரிக் அமில அளவை கட்டுக்குள் கொண்டு வர பெரிய அளவில் உதவும். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
தயிரில் உள்ள ப்ரோபயாடிக்குகள் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. இவை யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றன.
கிலோய் எனப்படும் சீந்தில் சாறை வெறும் வயிற்றில் குடிப்பது யூரிக் அமில அளவை வேகமாக கட்டுப்படுத்த உதவும். இதில் அதிக அளவில் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இது மூட்டு வலியையும் குறைக்கும்.
கற்றாழை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கற்றாழையிலிருந்து ஜெல்லை பிரித்தெடுத்து, தண்ணீரில் கலந்து, சாறு குடிப்பது உடலில் உள்ள யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.