ஆரோக்கியத்தை அதிகரிக்கும் இலைகள்

';

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களின் நன்மைகள் பட்டியலிட்டால் அது மிகவும் பெரியதாக நீளும். கறிவேப்பிலை இல்லாத தமிழ்நாட்டு சமையலறைகளே இல்லை என்று சொல்லும் அளவு நமது சமையலில் கறிவேப்பிலை இடம் பெற முக்கிய காரணம் அதன் ஊட்டச்சத்து பண்புகள் தான்

';

கொத்தமல்லி

கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் இணையாக பேசப்படும் இலைகள். இரண்டுமே ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகளுக்காக அறியப்பட்டவை

';

புதினா

செரிமானக் கோளாறுகளை சீர் செய்யும் புதினாவில் நிறைந்துள்ள சத்துக்கள் அதை சமையலறையில் முக்கியமான இலையாக இடம் பெற செய்துவிட்டது

';

வெந்தயம்

விதையாக இருந்தாலும், கீரையாக வளர்ந்தாலும் வெந்தயத்தின் மருத்துவ பண்புகள் அபாரமானவை. பல கீரைகள் இருந்தாலும், வெந்தயக்கீரையில் இருக்கும் லேசான கசப்புத்தன்மை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.

';

சோம்புக்கீரை

பொதுவாக சோம்பு விதைகள் சமையலில் பயன்படுத்தப்படும் அளவுக்கு சோம்புக்கீரைகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சோம்புக் கீரை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதக் கீரையாகும்

';

பீட்ரூட் கீரை

வழக்கமாக பீட்ரூட்டை சமைக்கும்போது, அதன் கீரையை பலரும் பயன்படுத்துவதில்லை. ஆனால், பீட்ரூட்டில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் அதன் கீரையில் உள்ளது. தயவு செய்து அதை புறக்கணிக்காதீர்கள்

';

வேப்பிலை

பெயரைக் கேட்டாலே கசப்பு என்ற உணர்வே நினைவுக்கு வரும். இது சமையலறையில் இடம் பெறாவிட்டாலும், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இலை ஆகும். இந்த இலை பட்ட காற்றே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். காற்றை சுத்தீகரிக்கும் பண்புகள் கொண்ட இந்த இலைகள் உள்ள வேப்ப மரம் நம் வீட்டுக்கு அருகில் இருந்தாலே ஆரோக்கியம் மேம்படும்

';

வெற்றிலை

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்தவை. வெற்றிலையை உணவு உண்டபிறகு தாம்பூலமாக உண்பது உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும். வெற்றிலயை கசாயமாக வைத்துக் குடித்தால் சில நோய்கள் குணமாகும்

';

துளசி

வேப்பிலையைப் போலவே மிகவும் நல்ல மருத்துவ பண்புகள் கொண்ட துளசி இலை வீட்டில் இருந்தாலே பல நோய்கள் நம்மை அண்டாது

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story