உடல் எடையை குறைக்க காலை உணவில் காய்கறி சாலட், பழங்கள, உலர் பழங்கள், ஓட்ஸ், சர்க்கரை இல்லாத பழச்சாறுகள் ஆகியவை சிறந்தவையாக இருக்கும்.
மதிய உணவில் பச்சை காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். மதிய உணவு புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த ஒரு சமச்சீர் உணவாக இருக்க வேண்டும்.
இரவு உணவு மிகவும் இலகுவானதாக இருக்க வேண்டும். எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்பே உட்கொள்ள முயற்சிக்கவும்.
உடல் எடையை இழக்க மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிக அவசியம். மன அழுத்தம் நீங்க, யோகா, இசை, புத்தகங்கள் என உங்கள் மனதை ஏதாவது ஒரு புதிய பழக்கத்தில் ஈடுபடுத்துங்கள்
போதுமான உறக்கம் இல்லையென்றால் கண்டிக்காப உடல் எடை கூடும். தினமும் 7-8 மணி நேரம் தூங்குவதும், இரவு உணவிற்கும் நீங்கள் உறங்கும் நேரத்திற்கு 2-3 மணி நேரம் இடைவெளி இருப்பதும் அவசியமாகும்.
உணவுடன் உடல் செயல்பாட்டிலும் அதிகப்படியான கவனம் தேவை. உடற்பயிற்சிகள், யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என ஏதாவது ஒன்றை கண்டிப்பாக தினமும் செய்ய வேண்டும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.