வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். எலுமிச்சை சாறு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, உடல் எடையை கறைக்கும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த இலவங்கப்பட்டையை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி பல நோய்களில் இருந்தும் இது நம்மை காக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
ஓமத்தில் நார்ச்சத்து மற்றும் பல வகையான தாதுக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை சீராக்கி, தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவுகின்றது.
கறிவேப்பிலையை தண்ணீர் சேர்த்து அரைத்து குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் குடித்து வந்தால் உடல் பருமன் பிரச்சனை குறைய ஆரம்பிக்கும்.
கல் உப்பு செரிமான பிரச்சனைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் எடை இழப்பிலும் தொப்பை கொழுப்பை கரைப்பதிலும் பெரிய அளவில் உதவும்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் கலோரிகளை எரிக்கும் பண்புகளும் அதிகமாக உள்ளன. இதை தினமும் காலையில் குடித்தால், உடல் பருமன், கொழுப்பு ஆகிய பிரச்சனைகளுக்க்கு தீர்வு கிடைக்கும்.
ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் பல வித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சோம்பு நீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.