உடல் பருமன் இன்றைய காலகட்டத்தில் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக உள்ளது. இதற்கான ஒரு எளிய தீர்வை இங்கே காணலாம்.
தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரவில் குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான தூக்கம் இல்லையென்றால், அது உடல் பருமனுக்கு வழி வகுக்கும்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது எலுமிச்சை நீர் குடிப்பது எடை இழப்பில் உதவும். இதனால் வளர்சிதை மாற்றம் மேம்படும்.
காலையில் பால் கலந்த தேநீருக்கு பதிலாக இலவங்கப்பட்டை, ஓமம், சீரகம், இஞ்சி போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் குடிப்பது கூடுதல் கொழுப்பை குறைக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவும்.
காலை உணவில் புரதச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் பருமனை குறைக்க உதவும். முட்டை, ஓட்ஸ், சால்ட், தயிர் ஆகியவை சிறந்தவை.
காலையில் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி, யோகாசனம், நடைபயிற்சி போன்ற ஏதாவது ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது மிக அவசியமாகும். இது கலோரிகளை வேகமாக எரிக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.