வருட ஆரம்பத்திலிருந்து உங்கள் சேமிப்பைக் கூடுதலாக அதிகரியுங்கள். இது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவிப்புரியும்.
சில முக்கிய செலவுகளை மட்டும் கவனமாகக் கையாளுங்கள். மருத்துவச் செலவு, குடும்ப அடிப்படை செலவு உள்ளிட்ட தேவையில் செலவுகளைக் கண்காணிக்கவும்.
உங்கள் வருமானத்தைக் கணக்கிட்டு அவற்றின் அடிப்படையில் செலவு மற்றும் சேமிப்பைச் சம நிலையில் பார்த்துக்கொள்ளவும்.
முடிந்த அளவுக்குக் கடன் வாங்குவதைக் குறைக்கவும். கடன் சேமிப்பைத் தடுக்கத்தூண்டும்.
குடும்பத்தில் உறுப்பினர்களுடன் அவர்களின் தேவையைக் கேட்டறிந்து அடிப்படைத் தேவையில் கவனம் செலுத்தவும்.
வாரந்தோறும் செலவிடும் பணம் மற்றும் சேமிப்பு பணம் இரண்டையும் வார இறுதியில் பகுப்பாய்வு செய்யவும்.
வங்கியில் மாதந்தோறும் தங்களால் முடிந்த பணம் சேமித்து வாருங்கள்.