தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இந்நாட்களில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இரவில் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு நடந்தால், இரவு முழுவதும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருப்பதோடு அடுத்த நாள் முழுவதும் அது கட்டுக்குள் இருக்கும்.
மிகவும் லேசான உணவுகளை இரவில் உண்ண வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாமல் இது அனைவருக்குமே நல்லது.
தினமும் இரவு தூங்கும் முன் இரத்த சர்க்கரை அளவை செக் செய்வது நல்லது. இதன் மூலம் இதை கட்டுக்குள் வைத்திருப்பது எளிதாக இருக்கும்.
இரவு தூங்கும் முன் லேசான உடற்பயிற்சிகளை செய்வது, அல்லது நடப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
துரித உணவுகள், சிப்ஸ், இனிப்புகள் போன்றவை சர்க்கரை அளவையும் உடல் எடையையும் அதிகரிக்கும். இவற்றை கண்டிப்பாக இரவில் சாப்பிட கூடாது.
இரவு தூங்கும் முன் காபி, டீ, மதுபானம் ஆகியவற்றை குடிக்க வேண்டாம்.