படுத்தி எடுக்கும் யூரிக் அமிலத்தை துரத்தி அடிக்கும் மசாலாக்கள்

Sripriya Sambathkumar
Oct 05,2024
';

யூரிக் அமிலம்

யூரிக் அமில அளவு அதிமானால், மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றை சரி செய்ய உதவும் சில மசலா பொருட்கள் பற்றி இங்கே காணலாம்.

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால் ஏற்படும் அழற்சி மற்றும் வலியை போக்க உதவுகின்றது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் ஆண்டி-ஆக்சிடெண்டுகளும் உள்ளன.

';

வெந்தயம்

வெந்தயம் அதிகரித்த யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.

';

இஞ்சி

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கவும், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கவும் உதவுகின்றன.

';

தனியா

தனியா அதாவது மல்லி விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றன.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை யூரிக் அமில அளவை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.

';

கிலோய்

கிலோய் எனப்படும் குடிச்சி பலவித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மூலிகை. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி, கீழ்வாதம் ஆகியவற்றுக்கு நிவாரணமாக அமைகின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story