ஞாபக மறதியை போக்கி நினைவாற்றலை அதிகரிக்கும் சில சூப்பர் உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை மூளை செயல்பாட்டை மேம்படுத்தும் பணியை செய்கின்றன.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ள பெர்ரி வகை பழங்கள் மூளையில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து அவற்றின் ஆற்றலை அதிகரிக்கின்றன.
உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது நினைவாற்றல் குறைய வாய்ப்புள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து நினைவாற்றலை அதிகரிக்க முழு தானியங்களை உட்கொள்வது நல்லது.
புரதச்சத்து அதிகம் உள்ள ராஜ்மா, கொண்டைக்கடலை, தலியா, பருப்பு வகைகள் ஆகியவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.
உலர் பழங்கள் உடல் வலிமை, மூளை செயல்பாடு என இரண்டுக்கும் மிக நல்லது. பாதாம், அக்ரூட் பருப்பு ஆகியவை நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன.
வைட்டமின் சி அதிகமாக உள்ள ஆரஞ்சு பழத்தை தினமும் உட்கொள்வதால் நினைவாற்றல் அதிகரித்து மூளை சுறுசுறுப்புடன் இயங்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.