டெங்கு, சிக்கன்கூனியா போன்ற காய்ச்சல் வந்தால் இரத்த பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. இது உடலுக்கு ஆபத்தானது.
பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சில ஆரோக்கியமான காய்கள் பற்றி இங்கே காணலாம்.
வைட்டமின் கே அதிகமாக உள்ல ப்ரோக்கோலி இரத்த பிளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
பீட்ரூட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது இரத்த பற்றாக்குறையை சரி செய்கிறது. இதனால் பிளேட்லெட் குறைபாடும் சரியாகிறது.
கேரட்டில் அதிக அளவில் பீடா கெரோடின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. இது பிளேட்லெட் குறைபாட்டை போக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பிளட் பிளேட்லெட்களை அதிகரிக்க பூண்டு உட்கொள்வது நன்மை பயக்கும். இதில் உள்ள பண்புகள் பிளேட்லெட்களை அதிகரிக்க உதவும்
பிளேட்லெட் குறைபாட்டை சரி செய்ய பாலக் கீரை போன்ற கீரை வகைகளை உட்கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.