பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகின்றன. டைப்-சி சார்ஜிங் போர்ட்டை மத்திய அரசு கட்டாயமாக்கவும் திட்டமிடுகிறது.
டைப்-சி சார்ஜிங் போர்ட் பயன்படுத்தும் போது செய்யும் தவறுகள் காரணமாக போன் சேதமடையக்கூடும்.
சார்ஜிங் அடாப்டர்கள் 44W, 65W, 100W மற்றும் 120W என்ற அளவிலான பவர் அவுட்புட் கொடுக்க கூடியவையாக இருக்கும்.
உங்கள் மாடலுக்கு ஏற்ற அவுட்புட் கொடுக்கக் கூடியது எது என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்
உங்கள் மொபைல் போன் மாடலுக்கு ஏற்ற சார்ஜிங் அடாப்டரை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்ய வேண்டும்.
சந்தையில் இரண்டு வகையான டைப்-சி சார்ஜிங் கேபிள்கள் உள்ளன. அதில் உங்களுக்கு போனுக்கு ஏற்றதை கேபிளை அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
எந்த வகையான சார்ஜராக இருந்தாலும். ரயில் நிலையம் அல்லது பொது இடங்களில் உள்ள வசதிகளை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.