ஆரோக்கியத்திற்கும் நிம்மதிக்கும் காரணமாகும் உணவு. அதை எப்போது, எப்படி உண்கிறோம் என்பது நமது ஆயுளையும் தீர்மானிக்கிறது
உடலுக்கு ஊக்கம் கொடுப்பது உணவு என்றால், அது நமது இயக்கத்திற்கு அவசியமானது. ஆனால், இரவில் நிம்மதியாக ஆழ்ந்த தூக்கம் தேவையான போது எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என தெரிந்து உண்பது நல்லது
காரமான உணவுகளை இரவு உணவில் சேர்த்துக் கொண்டால் அது தூக்கத்தை பாதிக்கும்
அதிக கொழுப்பு கொண்ட எண்ணையில் பொரிக்கப்பட்ட உணவுகளை இரவு வேளையில் உண்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்
உற்சாகத்தை ஊக்கப்படுத்தும் இனிப்பு உணவு என்பதால், இரவு நேரத்தில் இனிப்பான உணவை தவிர்க்கவும்
அதிக உப்பு சேர்த்த உணவுகளையோ, அல்லது அதிக அளவிலான உணவையோ இரவு உணவில் உண்ண வேண்டாம், அது உடல்நலத்தை பாதிக்கும்
வறுத்த சிக்கன் மீன் போன்ற மசாலா உணவுகளை இரவு வேளைகளில் தவிர்க்கவும்
குளிர்பானங்களாக இருந்தாலும் சரி, மது போன்ற உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும் பானமாக இருந்தாலும் சரி, உறங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன் பருக வேண்டாம்
பேக்கரி உணவுகள் மைதாவால் செய்யப்பட்டவை, இவற்றை இரவு உணவில் சேர்த்துக் கொள்ளவே வேண்டாம்
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது