இரவில் சாப்பிட்டால் வாயுத்தொல்லை, தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய சில காய்களை பற்றி இங்கே காணலாம்.
இரவில் ப்ரோக்கோலி சாப்பிட்டால், வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
காலிஃப்ளவரில் இருக்கும் சல்ஃபோரஃபைன் என்ற கூறு வாயு மற்றும் உப்பசத்திற்கு வழி வகுக்கிறது. ஆகையால் தூங்கும் முன் இதை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சரியல்ல
அதிக நார்ச்சத்து உள்ள முட்டைகோசை இரவில் சாப்பிடுவதால் உடல் உப்பசம் ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படும்.
வாயுத்தொல்லை, உடல் உப்பசம், அஜீரணம் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இரவில் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பூண்டில் உள்ள ஃப்ருக்டேன் காரணமாக அசிடிக் ரிஃப்ளெக்ஸ் ஏற்பட்டு தூக்கம் பாதிக்கப்படலாம்.
பச்சை பட்டாணியில் உள்ள சில கூறுகள் காரணமாக இதை இரவில் சாப்பிடுவது செரிமானத்தை சீர்குலைத்து தூக்கத்தை கெடுக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.