கருவளையம் முக அழகை குலைக்கிறது என்பதோடு, வயதான தோற்றத்தை கொடுக்கிறது. சில வீட்டு வைத்தியங்கள் மூலம் கருவளையத்தை மிக எளிதாக போக்கலாம்.
புதினா இலைகளை கசக்கி சாறு எடுத்து, அதனை கண்களுக்கு கீழ் தடவி வந்தால் சில நாட்களில் கருவளையங்கள் மறைந்து விடும்.
வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ள.உருளைக்கிழங்கு சாற்றை கண்களுக்குக் கீழே தடவி வந்தால் கருவளையத்தைப் போக்கலாம்.
வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட் டி 10 நிமிடங்களுக்கு உங்கள் கண்களில் வைத்திருங்கள், இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
கருவளையத்தை போக்க கற்றாழை சிறந்த மாய்ஸ்சரைசர். கண்களைச் சுற்றியுள்ள பகுதியை ஈரப்பதத்துடன் வைத்து, கருவளையங்களை நீக்குகிறது.
தக்காளியில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கருவளையங்களை நீக்க, 2 டீஸ்பூன் தக்காளிச் சாற்றில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலகக்கி தடவவும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.