வறுத்த & காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிட்ட பிறகு டீ மற்றும் காபி சாப்பிடுவது, நள்ளிரவு வரை தூங்காமல் இருப்பது என பல காரணங்களால் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படலாம்
அமிலத்தன்மை காரணமாக, நெஞ்செரிச்சல், வாயு, வீக்கம், புளிப்பு ஏப்பம் குமட்டல் போன்ற பிரச்சனைகள்ல் ஏற்படும். அதற்கு இந்த நீராகாரங்கள் மருந்தாய் செயல்படும்
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக்கும் சோம்பு, வாயு, வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கும். சோம்பை வெறுமனே மென்று சாப்பிடலாம் அல்லது தேநீர் தயாரித்து குடிக்கலாம்.
அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட, லாக்டிக் அமிலம் மோர் குடிக்கலாம். வயிற்றுக்கு குளிர்ச்சி கொடுக்கும் இதற்கு மோரில் கொத்தமல்லித்தழை மற்றும் கருப்பு உப்பு சேர்த்து குடிக்கவும்
செரிமானத்தை மேம்படுத்தவும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் வழங்கவும் சீரகம் பயனுள்ளதாக இருக்கிறது. சீரகத்தை தன்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது பலன் தரும்
இஞ்சி பல நோய்களுக்கு எமனாக இருக்கும். அதிலும் அமிலத்தன்மை பிரச்சனையில் இருந்து விட இஞ்சியை பல விதங்களில் பயன்படுத்தலாம். அதில் ஒன்று இஞ்சியை தட்டிப்போட்டு தண்ணீரில் கொதிக்கவிட்டு அதில் தேன் சேர்த்து குடிப்பது. இந்த கசாயம் பல்வேறு பிரச்சனைகளுக்கு அருமருந்தாக செயல்படும்
அமிலத்தன்மையை போக்கும் இயற்கை பானம் இளநீரை தினசரி குடித்தால் ஆரோக்கியம் மேம்படும்
உடலுக்கு குளிர்ச்சி தரும் கற்றாழையை ஜூஸாக செய்துக் குடித்தால் வயிற்றெரிச்சல், நெஞ்செரிச்சல் என அனைத்து எரிச்சல்களும் தீரும்
வயிற்றுப் பிரச்சனைகளுக்கு தர்பூசணிப் பழம் அருமையான தீர்வாக இருக்கும். அதிலும் அதனை ஜூஸாக செய்து குடிப்பது நல்ல பலன் தரும்
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை