விந்தணு

இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம் காரணமாக பாலியல் தொடர்பான பிரச்சனைகள் மிகவும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஆண்கள் பாலியல் ஆரோக்கியத்தையும் விந்தணு எண்ணிக்கையையும் பாதிக்கக்கூடும் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

';

விந்தணு குறைபாடு

திடீரென பாலியல் ஆர்வம் குறைந்து போதல், விதைப்பையில் வீக்கம் மற்றும் வலி, விறைப்புக் கோளாறு, திடீர் எடை இழப்பு போன்றவை விந்தணு குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

';

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்துக்கள் குறைபாடும் சத்துக்களே இல்லாத, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சில வகை உணவுகளும் அதிகமாக உட்கொள்ளும்போது விந்துவில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு ஏற்படுகிறது.

';

சோயா

சோயா தயாரிப்புகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ( phytoestrogens) அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும்.

';

விந்தணு குறைபாடு

விந்தணு குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று வரும் ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அதிகப்படியான சோயா உட்கொள்வதால் விந்தணு குறையக்கூடும் என தெரிய வந்துள்ளது.

';

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது.

';

பூச்சிக்கொல்லிகள்

பயிர்களில் பயன்படுத்தப்படும், பூச்சிக் கொல்லிகள், ரசாயனங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உணவில் சேருகின்றன. இவை விந்தணுவை பாதிக்கும். இவற்றை உப்பு மற்றும் மஞ்சள் கலந்து நீரில் சுத்தம் செய்து சாப்பிடுவது நல்லது.

';

பேக்கேஜ் உணவுகள்

பேக்கேஜிங் மற்றும் கேன்களில் உள்ள உணவுகளிலும் பிபிஏ மற்றும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள ரசாயனங்கள் இரண்டும் ஜீனோஎஸ்ட்ரோஜன்களாக செயல்படுகின்றன. ஜீனோ ஈஸ்ட்ரோஜன்களும் (Xenoestrogens) விந்தணு எண்ணிக்கையை குறைக்கும்.

';

Trans Fats

டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன. டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதோடு விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும்.

';

அதிக கொழுப்பு உள்ள பால்

அதிக கொழுப்பு பால் பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்வதும் விந்தணுக்களை குறைக்கும். கொழுப்பு நீக்கப்படாத பால், கிரீம் மற்றும் சீஸ் ஆகியவை காரணமாக விந்தணு குறையும்.

';

உடல் ஆரோக்கியம்

அதிகப்படியான உடல் எடை , சில மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள், ஆகியவையும் விந்தணு குறைய காரணமாகின்றன. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ புத்திசாலித்தனமான மற்றும் சிறந்த உணவு தேர்வுகளை செய்யுங்கள்.

';

VIEW ALL

Read Next Story