இதயம் முதல் நுரையீரல் வரை... தினம் வெறும் வயிற்றில் பூண்டு ஒன்றே போதும்...!

Vidya Gopalakrishnan
Jul 24,2024
';

பூண்டு

உணவிற்கு மனம் சேர்க்கவும் ருசி சேர்க்கவும் பயன்படுத்தப்படும் பூண்டில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் அடங்கியுள்ளது.

';

பூண்டு ஊட்டசத்துக்கள்

பூண்டில் வைட்டமின்கள் தாதுக்கள் மட்டுமல்லாது அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

';

பூண்டு நன்மைகள்

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பெரிய பட்டியலே போடலாம்.

';

நுரையீரல்

பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல் குழாயில், கெட்டியாக சிக்கி இருக்கும் சளியை இழக்கும் ஆற்றல் கொண்டது.

';

ரத்த ஓட்டம்

பூண்டைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதோடு, ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

';

சிறுநீரகம்

நச்சுக்களை நீக்கும் பூண்டை தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் மட்டுமல்லாது கல்லீரலும் ஆரோக்கியமாக இருக்கும்.

';

கொலஸ்ட்ரால்

இதய தமனிகளில் சேர்ந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது பூண்டு.

';

தாய்ப்பால் சுரப்பு

பாலில் பூண்டை வேகவைத்து, தொடர்ந்து அருந்தி வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

';

அஜீரண பிரச்சனை

செரிமானத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்ட பூண்டு, வாயு பிரச்சனையை போக்கி, அஜீரண பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டில் உள்ள அலிசின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட், வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story