ஆளிவிதைகளின் அட்டகாசமான ஆரோக்கிய நன்மைகள்: கண்டிப்பா சாப்பிடுங்க!!

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

இரத்த அழுத்தம்

ஆளி விதைகள் இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்த உதவுகின்றன. இதன் மூலம் இவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

நீரிழிவு நோய்

ஆளி விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானம் மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்கும். நீரிழிவு நோயாளிகள் ஆளி விதைகளை தங்கள் உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

கொலஸ்ட்ரால்

ஆளிவிதைகள் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

செரிமானம்

ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு பங்களிக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

இரத்த சோகை

ஆளிவிதைகளில் அதிக இருப்புச்சத்து உள்ளது. இது இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவை எதிர்த்துப் போராட உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

எடை இழப்பு

ஆளிவிதைகளை உட்கொள்வது நிறைவான உணர்வை அளிக்கும், ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலையும் கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்க முயல்பவர்கள் கண்டிப்பாக தங்கள் உண்வில் ஆளி விதைகளை உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

ஆளி விதைகள்

மாதவிடாய் பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் மன சோர்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கும் ஆளி விதைகள் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

VIEW ALL

Read Next Story