கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி பலருக்கு தெரிந்திருக்கும். சமையலில் தாளிதம் செய்ய கடுகு இன்றியமையாதது.சாம்பார் ரசம், காய்கறி என எதுவானாலும், கடுகில்லாமல் முழுமை பெறாது.
ஆரோக்கிய முக்கியத்துவம் பெற்ற கடுகு, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது என்பது பலருக்கு தெரிவதில்லை.
மூட்டு வலிக்கு அருமருந்தாக கடுகு எண்ணெய் பயன்படும். சூடாக்கப்பட்ட கடுகு எண்ணெயை தடவி வந்தால் மூட்டு வலி பெரிய அளவில் குறையும்
கடுகு எண்ணெய் மூட்டு வலிக்கு மட்டுமல்லாது தசை வலிக்கும் நல்ல நிவாரணம் கொடுக்கும்.
படர்தாமரை உள்ளிட்ட சரும நோய்களுக்கு கடுகை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
கடுகை பொடி செய்து, ஒரு கப் தண்ணீரில் ஒன்று இரண்டு சிட்டிகை சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் விக்கல் தீரும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.