பால் குடிப்பதால் வரும் பிரச்சனைகள்..!
பால் குடிப்பதால் உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. பாலில் கால்சியம், புரதம், கொழுப்பு மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
பால் கால்சியத்தின் ஆதாரமாக பார்க்கப்படுகிறது. 100 கிராம் குறைந்த கொழுப்புள்ள பாலில் 125 மில்லி கிராம் கால்சியமும், 100 கிராம் அதிக கொழுப்புள்ள பாலில் 119 கிராம் கால்சியமும் உள்ளது.
தினசரி தினமும் பால் குடிப்பதால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவடையும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெதுவெதுப்பான பாலை குடிக்கலாம்.
சிறு குழந்தைகளுக்கு புரோட்டீன் குறைபாட்டை நீக்க தினமும் பால் கொடுக்க வேண்டும். பாலில் அதிக அளவு புரதம் உள்ளது.
பிட்னஸில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் பால் அதிகம் குடிப்பார்கள். காரணம் உடலுக்கு தேவையான புரதம் எளிதாக பாலில் இருந்து கிடைக்கிறது.
சிலருக்கு பால் குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக உடல் பருமன், இரத்த அழுத்தம் அல்லது இதயம் தொடர்பான பிற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பாலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால் பலருக்கு வாயு பிரச்சனையும் அதிகரிக்கிறது. தினசரி பால் குடிக்கும் போது சில தோல் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
பருக்கள் மற்றும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாலில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால் பலரது உடல் அதனை ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.