கொழுப்பை எரிக்க... சுவையான ‘சில’ காலை உணவுகள்!

';

பாசிப்பருப்பு தோசை

பாசிப்பருப்பு தோசை புரதம் நிறைந்துள்ளது. அதிலும் முளை விட்ட பாசிப் பருப்பு அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது. பாசிப்பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து, தேசை தயாரித்தால், மிகவும் சுவையாக இருக்கும்.

';

முளை கட்டிய பயறு

முளை கட்டிய பயறு வகைகளில் புரதம் நிறைந்துள்ளது. இதனால் இவை எடை இழப்பிற்கு வரப்பிரசாதமகா இருக்கும். இதில் சில காய்கறிகள் மற்றும் சாட் மசாலாவுடன் இணைந்தால், அவை அற்புதமான சுவையான உணவாக இருக்கும்.

';

கோதுமை ரவை

சம்பா கோதுமை ரவை நார்ச்சத்து நிறைந்த சூப்பர்ஃபுட். ​​அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க அதில் காய்கறிகளை சேர்த்து சமைக்கவும். அதில் வேக வைத்த கடலை பருப்பையும் சேர்த்தால், ஆரோக்கியமான டயட் உணவு ரெடி.

';

அவல்

உடல் எடையை குறைக்க சிவப்பு அவல் மிகவும் சிறந்தது. அவலில் கலோரிகள் குறைவு, ஜீரணிக்க எளிதானது. சிறந்த புரோபயாடிக் உணவான ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்திற்கு உங்களுக்கு உதவும்.

';

பன்னீர்

பன்னீர் ஸ்டஃப் செய்த பராட்டா புரத சத்தினை வழங்கும் சிறந்த உணவாகும். பனீர் ஸ்டஃப்டு ரொட்டி, பனீர் மற்றும் சப்பாத்தியுடன், காய்கறிகள் கலந்த பன்னீர் ஸைட் டிஷ் அல்லது பனீர் சாண்ட்விச் ஆகியவற்றையும் காலை உணவாக உண்ணலாம்.

';

சோயா உப்புமா

சோயாபீன், சோயா பால் மற்றும் டோஃபு அனைத்திலும் புரதம் நிறைந்துள்ளது. சோயா உப்புமா செய்ய சோயா துண்டங்களைப் பயன்படுத்தலாம். சோயா சங்க்ஸை தண்ணீரில் ஊறவைத்து, மசாலா மற்றும் காய்கறிகளுடன் தாளித்து உப்புமா செய்யலாம்.

';

முட்டை

புரோட்டீன் நிறைந்த முட்டை காலை உணவிற்கு சிறந்தது. வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்து வேக வைத்த முட்டைகளை சாப்பிடலாம் அல்லது முட்டை ஆம்லெட்டையும் காய்கறிகளை சேர்த்து தயாரித்து சாப்பிடலாம்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story